இந்தியாவில் Vivo நிறுவனம் Vivo V27 ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 3D Curve screen, 120HZ refresh rate, கலர் மாறும் கிளாஸ் பேனல், ட்ரிபிள் கேமரா வசதி, Mediatek dimensity 8200 SoC, Vanilla மாடலில் Mediatek Dimensity 7200 5G SoC போன்றவை உள்ளன.
இந்த போன்களின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் விற்பனை மார்ச் 27 முதல் தொடங்குகிறது. HDFC, ICICI மற்றும் Kotak mahindra ஆகிய வங்கிகள் மூலமாக நாம் இந்த ஸ்மார்ட்போனை 3000 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உடன் வாங்கலாம். இதை Flipkart, Vivo Store ஆகியவற்றில் வாங்கலாம்.
விலை விவரம்
விவோ நிறுவனத்தின் V27 Pro 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 37,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 39,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 42,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது.
Vivo V27 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 32,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 36,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் Magic Blue, Noble Black ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Vivo V27 series விவரம்
இந்த இரு போன்களிலும் வசதிகள் ஒரே அளவு உள்ளன. இரண்டிலும் Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட Funtouch OS 13 உள்ளது. கூடுதலாக 6.78இன்ச் Full HD+ (1080×2400 Pixels) AMOLED டிஸ்பிலே வசதி, 120HZ Refresh rate போன்றவை உள்ளன.
இதில் Mediatek Dimensity 7200 5G SOC சிப் மற்றும் Pro மாடலில் 4nm Mediatek Dimensity 8200 Soc சிப் உள்ளது. இந்த போனில் 50MP Sony IMX 766V OIS (Optical Image Stabilisation), 8MP அல்ட்ரா வைட் கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், இதன் முன்பக்கம் 50MP செல்பி கேமரா வசதி இடம்பெறும்.
இவற்றில் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வசதி, 5G, WiFi, ப்ளூடூத் 5.3, GPS, Beidu, Glonass, Galileo, Navic, USB Type-C போர்ட், பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற வசதிகள் உள்ளன. பேட்டரி வசதியாக 4600mAh பேட்டரி, 66W பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் 50% சார்ஜிங் நமக்கு வெறும் 19 நிமிடங்களில் நடந்துவிடும். இதன் ப்ரோ மாடல் எடை 182g மற்றும் ஸ்டாண்டர்ட் மாடல் 180g எடை கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்