ஆறு ஆண்டுகளாக, முறையான ஆவணங்களின்றி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சுற்றித்திரிந்த ஆசிய நாட்டவர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனிக்குள் நுழைய முயன்ற ஆசிய நாட்டவர்
கடந்த ஞாயிறன்று, ரயில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையின்போது, ஆஸ்திரியா நாட்டிலிருந்து சட்டவிரோதமாக ஜேர்மனிக்குள் நுழைய முயன்ற 37 வயதான ஆசிய நாட்டவர் ஒருவர், Lindau என்ற இடத்தில் பொலிசாரிடம் சிக்கினார்.
அவரிடம் முறையான பாஸ்போர்ட் இருந்தும், முறையான குடியிருப்பு அனுமதி இல்லை. 2017ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் அவர் வாழ்ந்துவந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.
2019ஆம் ஆண்டு ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்படவேண்டிய அவர் தலைமறைவாகியிருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் ஆஸ்திரியாவில் முறையான ஆவணங்களின்றி வேலை செய்தபோது பிடிபட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு, குடியிருப்பு அனுமதியின்றியே அவர் கொரோனா தடுப்பூசியும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக, வழக்கமான சோதனை ஒன்றின்போது அவர் ஜேர்மன் பொலிசாரிடம் சிக்கிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.