Election Results 2023: நாளை வெளியாகும் 3 மாநில தேர்தல் முடிவுகள்..! எப்படி? எங்கு பார்ப்பது?

நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைகளுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. திரிபுரா சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 16 ஆம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டமன்றங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதியும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இந்த 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 2 ஆம் தேதியான நாளை வெளியாகிறது. பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

தேர்தல் முடிவுகள் – பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதனையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளும் தயார் நிலையில் இருக்கின்றன. 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை காலை 8 மணி முதல் வெளியாகும். ஒவ்வொரு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னணி நிலவரங்கள் தெரியவரும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதுவரை வெளியாகியிருக்கும் கருத்து கணிப்புகளின் முடிவுகளின் அடிப்படையில் திரிபுராவில் பாஜக, மேகாலயாவில் NPP மற்றும் நாகாலாந்தில் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி ஆகியவை ஆட்சியமைக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஆட்சியிருந்த இக்கட்சிகள் மீண்டும் ஒரு முறை ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் இருக்கின்றன. 

தேர்தல் முடிவுகள் 2023: எப்போது & எங்கு பார்க்க வேண்டும்?

தேர்தல் முடிவுகள் 2023, ஜி நியூஸ் உள்ளிட்ட அனைத்து முன்னணி செய்தி சேனல்களிலும் நேரடி வாக்கு எண்ணிக்கையுடன் மார்ச் 2, 2023 அன்று காலை முதல் வெளியாகும். திரிபுராவில் 87.6%, நாகாலாந்தில் 84.08%, மேகாலயாவில் 76.27% வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் முடிவுகள் 2023 தொகுதி வாரியாக வெளியிடப்படும். இத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.