திருவெல்லிக்கேனி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான
உதயநிதி ஸ்டாலின்
இன்று புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு அப்போது கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு!
“தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இப்போது பகுதி நேரமாக செயல்படும் 700 கடைகளும் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 500 கடைகள் வீதம் கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இன்று (01.03.2023) காலை 11.00 மணியளவில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, உலகப்ப தெருவில் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.21.44 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையினை விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களும் மற்றும் 5 புதிய குடும்ப அட்டைகளும் வழங்கினார்.
தடையின்றி பொருள்கள் விநியோகம்!
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இந்த நியாயவிலைக் கடைக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அத்தயாவசிய பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 687 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 26 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அமைச்சர்கள் பங்கேற்பு!
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள், நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டல குழு தலைவர் எஸ்.மதன் மோகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.