இந்திய தேர்தல் நடைமுறையில் முக்கிய சீர்திருத்தம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புது டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை (ECs) நியமிக்கும் அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு சுதந்திரமான ஓர் அமைப்பு வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து.

தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையில் சுதந்திரம் மற்றும் சீர்திருத்தம் வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது. அதாவது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் நியமனம் மட்டுமே செய்யப்பட்டு வந்த நிலையில், இனி பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழு மட்டுமே நியமிக்குமென உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை, இந்த நடைமுறையே தொடரும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

எந்த தலையீடும் இல்லாமல் தேர்தல் ஆணையம் மேலும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் நடுநிலை மற்றும் சுதந்திரத்தை பேணுவதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு இது மிகவும் அவசியமானது. தேர்தல் ஆணையர்களை நியமித்தல் மற்றும் நிர்வாக தலையீட்டில் இருந்து காப்பற்றப்பட வேண்டும்.  

தேர்தல்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நியாயமானதாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் தேர்தலின் தூய்மை பேணப்பட வேண்டும். இல்லையெனில் அது பேரழிவு தரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தற்போதைய தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.