ஜேர்மனியின் பாதுகாப்புக்கென இருக்கும் ஆயுதங்களை ஜேர்மனி உக்ரைனுக்கு வழங்கிக்கொண்டே இருந்தால், ஜேர்மனியின் பாதுகாப்புக்கே குந்தகம் ஏற்படும் என ஜேர்மன் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஜேர்மனி
ரஷ்யா உக்ரைன் போரில் முதலில் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்யத் தயங்கிய ஜேர்மனி, இப்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முன்வந்துள்ளது.
போர் வாகனங்கள், குண்டுகள் முதலான பல விடயங்களை உக்ரைனுக்கு வழங்க ஒப்புக்கொண்ட ஜேர்மனி, தற்போது Skynex மற்றும் Skyranger என்னும் வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது.
ஆயுத உற்பத்தியாளர் எச்சரிக்கை
ஆனால், ஜேர்மனிக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்யக்கூடிய முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனமான Rheinmetall நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாகிய Armin Papperger, தற்போது ஜேர்மனி உக்ரைனுக்கு வழங்க முன்வந்துள்ள Skynex மற்றும் Skyranger என்னும் வான் பாதுகாப்பு ஆயுதங்கள், பெர்லின் வான்வெளியை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை.
அவை, உக்ரைனுக்கு அனுப்பப்படுமானால், பெர்லினின் பாதுகாப்புக்கே குந்தகம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், தொடர்ந்து ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவதை எதிர்த்து, ஜேர்மன் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.