₹.11.49 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹோண்டா சிட்டி கார் மிக சிறப்பான ஹைபிரிட் அம்சத்துடன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் சிறிய அளவிலான வடிவ மாற்றங்கள், கூடுதல் உபகரணங்கள், புதிய தொடக்க நிலை வேரியண்ட் மற்றும் புதிய நிறம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
2023 Honda City
சிட்டி ஃபேஸ்லிஃப்ட் புதிய முன் கிரில்லில் மெல்லிய குரோம் ஸ்லேட் மற்றும் எல்இடி ஹெட்லைட்கள், புதிய பம்பர் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் முன்பு போலவே ஒன்பது எல்இடி வரிசைகளுடன் டெயில்-லேம்ப்களை வைத்திருக்கிறது. இன்டிரியரில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை.
சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய SV வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மற்ற டிரிம்கள் – V, VX மற்றும் ZX – CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இருக்கும். புதிய சிட்டி எஸ்வி வேரியண்ட்டுக்கு கூடுதலாக, ஹைப்ரிட் செடானின் ஆரம்ப விலையை குறைக்கும் வகையில் புதிய சிட்டி e:HEV VX மாடலை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது.
சிட்டி ஃபேஸ்லிஃப்ட் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் தன்னாட்சி அவசரகால பிரேக்கிங் போன்றவற்றை ADAS வழங்குகின்றது.
ஹோண்டா சிட்டி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பெட்ரோல் என்ஜின் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 121hp பவர், 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்று 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. 126hp, 1.5 லிட்டர் Atkinson cycle ஹைப்ரிட் எஞ்சினுடன் e-CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். தற்போதைய நிலவரப்படி, நடுத்தர பிரிவு செடானில் மிக வலுவான ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெற்ற காராகும்.
RDE (real driving emissions) விதிமுறைகள் மற்றும் E20 ஏரிபொருளுக்கு ஏற்றவையாக இரண்டு என்ஜின்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
சிட்டி போட்டியாளர்கள்
மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் விர்டஸ், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் வரவிருக்கும் புதிய ஹூண்டாய் வெர்னா ஆகிய கார்களை எதிர்கொள்ளுகின்றது.
Honda City facelift prices
HONDA CITY FACELIFT PRICE (EX-SHOWROOM, DELHI) | |||
---|---|---|---|
Variant | Petrol manual | Petrol auto | Petrol-hybrid |
SV | ₹ 11.49 lakh | – | – |
V | ₹ 12.37 lakh | ₹ 13.62 lakh | ₹ 18.89 lakh |
VX | ₹ 13.49 lakh | ₹ 14.74 lakh | – |
ZX | ₹ 14.72 lakh | ₹ 15.97 lakh | ₹ 20.39 lakh |