ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட 2 மடங்கு அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். இதனால் திமுக, காங்கிராஸ் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதேநேரத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளதால், எடப்பாடி கடும் அப்செட் அடைந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணி மீண்டும் குஷியடைந்து தங்கள் அணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 13-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 97,729 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 38,790 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 7,984, தேமுதிக 1,115 வாக்குகளும் பெறுள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி உறுதியானது. இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளதால் இளங்கோவன் வெற்றி உறுதியானது. இன்னும் 2 சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டி உள்ள நிலையில் 58,939 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.