தானே, மஹாராஷ்டிராவில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த இரு குழந்தைகளை, இரண்டாவது மாடியிலிருந்து துாக்கி வீசிய கொடூர நபர் கைது செய்யப்பட்டார். இதில், ஒரு குழந்தை பலியானது; மற்றொரு குழந்தை படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறது.
மஹாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் ஆசிப் மற்றும் அவரது மனைவி வசிக்கின்றனர்.
இத்தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இவர்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கு 5 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். ஆசிப்பின் மனைவி, இந்த குழந்தைகளுடன் பேசி, விளையாடி வந்துள்ளார். இதில் எரிச்சல் அடைந்த ஆசிப், தன் மனைவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், ஆசிப் நேற்று இந்த குழந்தைகளை இரண்டாவது மாடியிலிருந்து துாக்கி வீசி உள்ளார். இதில் சிறுவன் உயிரிழந்தான்.
படுகாயமடைந்த சிறுமியை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்து, போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார், ஆசிப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement