FIFA 2022 உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக 35 தங்க ஐபோன்களை கேப்டன் லியோனல் மெஸ்ஸி பரிசாக வழங்குகிறார்.
அணியில் ஒவ்வொரு வீரரின் பெயர், எண் மற்றும் அர்ஜென்டினா லோகோ பொறிக்கப்பட்டு தனித்துவமான வடிவமைக்கப்பட்டுள்ள இந்த iPhone 14 Pro போன்களை லியோனல் மெஸ்ஸி ஆர்டர் செய்தார்.
24 காரட் தங்கத்தால் ஆன இந்த ஐபோன்களின் ஆர்டர் சனிக்கிழமை மெஸ்ஸியின் குடியிருப்பில் டெலிவரி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மெஸ்ஸி 175,000 பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ. 7.52 கோடி) செலவழித்துவதாக கூறப்படுகிறது.
FIFA/Twitter @CrewsMat10
இரண்டு முறை கோல்டன் பால் வென்ற மெஸ்ஸியின் இத்தகைய முயற்சி, கத்தாரில் 2022 உலகக் கோப்பையில் தனது அணியின் வரலாற்று சாதனையை நினைவுபடுத்துவதற்கான ஒரு பரிசாகும்.
1986-ல் அர்ஜென்டினாவுக்காக மரடோனா கோப்பையை வென்றதிலிருந்து 36 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, தனது தலைமையில் நாட்டுக்காக இந்த கோப்பையை மீண்டும் கொண்டு வந்த பெருமையை அழியாததாக மாற்றுவதற்கு சக வீரர்களுக்கு இதுபோன்ற ஒரு பரிசை மெஸ்ஸி வழங்குகிறார்.
Getty Images
Twitter @CrewsMat10
Twitter @CrewsMat10
iDesign Gold-ன் CEO பென் லியான்ஸ் தி சன் பத்திரிக்கைகள அளித்த பேட்டியில், “லியோனல் மெஸ்ஸி GOAT மட்டுமல்ல, அவர் IDESIGN GOLD-ன் மிகவும் விசுவாசமான வாடிக்கையாளர்களில் ஒருவர், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு பிறகு எங்களைத் தொடர்பு கொண்டார். இந்த அற்புதமான வெற்றியைக் கொண்டாட அனைத்து வீரர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு சிறப்பு பரிசு வேண்டும் என்று அவர் கூறினார், ஆனால் வழக்கமான பரிசை விரும்பவில்லை. எனவே, தங்க ஐபோன்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டவற்றை நான் பரிந்துரைத்தேன், மேலும் அவர் இந்த யோசனையை விரும்பினார்” என்று கூறினார்.