பாட்னா: பீஹார் மாநிலம் வைசாலி மாவட்டம் ஹர்பூர் கிராமத்தில் உள்ள குளத்தில் மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்த 17 மதுப்பாட்டில் பெட்டிகளை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பீஹார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கள்ளச்சாரயம் கலாசாரம் தலை தூக்கியுள்ளது. இதனால் சில தினங்களுக்கு முன் கள்ளச்சாரயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பீஹார் மாநிலம் ஹர்பூர் கிராமத்தில் உள்ள குளத்தில் மர்மநபர்கள் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் குளத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் குளத்தில் மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்த 17 மதுப்பாட்டில் பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹர்பூர் கிராமத்தில் உள்ள குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 மதுப்பாட்டில் பெட்டிகளை மீட்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஹோலி கொண்டாட்டங்களுக்காக ஹரியானாவில் இருந்து சிறப்பு மதுபானங்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிகிறது.
பீஹார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் புழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் மர்மநபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, பல்வேறு சதி திட்டங்களை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement