இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற பைக்குகளில் அதிக மைலேஜ் தரும் சிறந்த பைக்குகள் விபரத்துடன், அந்த பைக்குகளின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலை கூடுதலாக முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
பெட்ரோலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து பலரும் விரும்பக்கூடிய மைலேஜ் தரும் பைக்குகளில் முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள சிலவற்றை பயனாளர்களின் அனுபவத்தில் இருந்து பெறப்பட்ட உண்மையான மைலேஜ் அடிப்படையில் இந்த பட்டியல் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
2023 Bajaj Platina 100
இந்திய சந்தையில் அதிகப்படியான மைலேஜ் தரும் பைக் மாடலாக விளங்குகின்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா பைக்கின் இந்நிறுவன தரவுகளின் அடிப்படையில் லிட்டருக்கு 96 கிமீ வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.
ஆனால் சாலைகளில் பயணிக்கும் பொழுது மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப உண்மையான நிகழ்நேர மைலேஜ் லிட்டருக்கு 72 முதல் 75 கிமீ வரை கிடைக்கின்றது.
Bajaj Platina 100 | |
Engine Displacement (CC) | 102 cc DTS-i, Single Cylinder |
Power ([email protected]) | 7.9 PS @ 7500 rpm |
Torque ([email protected]) | 8.3 Nm @ 5500 rpm |
Gear Box | 4 Speed |
Mileage (Internal) | 96 Kmpl |
Mileage – Owners Reported | 74 Kmpl |
2023 பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ES டிரம் வேரியண்டின் ஆன்ரோடு விலை ₹ 79,227 ஆகும்.
2023 TVS Sport
ஆசியா சாதனை புத்தகத்தில் (Asia Book of Records) அதிக மைலேஜ் தரும் பைக் என்ற பெயரை பெற்றுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவன ஸ்போர்ட் பைக் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 110.12 கிமீ கொடுத்தள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டார் சிட்டி + மற்றும் ஸ்போர்ட் என இரு பைக்குகளும் ஒரே 109.7cc என்ஜின் பெற்றுள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 74 கிமீ வரை கிடைப்பதாக உரிமையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
TVS Sport | |
Engine Displacement (CC) | 109.7 cc Fi, Single Cylinder |
Power ([email protected]) | 8.29 PS @ 7350 rpm |
Torque ([email protected]) | 8.7 Nm @ 4500 rpm |
Gear Box | 4 Speed |
Mileage (Internal) | 95 Kmpl |
Mileage – Owners Reported | 74 Kmpl |
2023 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை ₹ 77,111 (கிக் ஸ்டார்ட்), ₹ 79,810 (EL) மற்றும் ₹ 86,087 (ELS) வரை அமைந்துள்ளது.
2023 Hero Splendor Plus
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் இந்தியர்களின் முதன்மையான தேர்வாக அமைந்துள்ளது. சிறப்பான மைலேஜ், நம்பகமான என்ஜின், மறு விற்பனை மதிப்பு போன்றவை மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் தரவுகளின் படி ஸ்பிளெண்டர் பிளஸ் மைலேஜ் லிட்டருக்கு 80 கிமீ ஆகும்.
பயன்பாட்டின் போது நிகழ் நேரத்தில் ஸ்பிளெண்டர் பைக் அதிகபட்சமாக லிட்டருக்கு 68 கிமீ முதல் 72 கிமீ வரை கிடைக்கின்றது.
Hero Splendor+ | |
Engine Displacement (CC) | 97.2 cc Fi, Single Cylinder |
Power ([email protected]) | 8.02 PS @ 8000 rpm |
Torque ([email protected]) | 8.05 Nm @ 6000 rpm |
Gear Box | 4 Speed |
Mileage (Internal) | 81 Kmpl |
Mileage – Owners Reported | 70 Kmpl |
2023 ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் பல்வேறு மாறுபட்ட வேரியண்ட்களில் எக்ஸ்டெக் உள்ளிட்ட கனெக்ட்டே வசதியும் பெற்ற ஆரம்ப ஆன்-ரோடு விலை ₹ 86,480 முதல் ₹ 90,890 வரை கிடைக்கின்றது.
2023 Hero HF Deluxe
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மற்றொரு அதிக மைலேஜ் தரும் பைக் மாடலாக HF டீலக்ஸ் மற்றும் HF 100 என இரு மாடல்கள் இடம்பெற்றுள்ளது. ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற இரு மாடல்களும் இந்தியாவின் மிக விலை குறைந்த பைக் மாடலாகும்.
தொடக்கநிலை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இரு மாடல்களும் சராசரியாக லிட்டருக்கு 70 கிமீ வரை மைலேஜ் தருகின்றது.
Hero HF Deluxe & HF 100 | |
Engine Displacement (CC) | 97.2 cc Fi, Single Cylinder |
Power ([email protected]) | 8.02 PS @ 8000 rpm |
Torque ([email protected]) | 8.05 Nm @ 6000 rpm |
Gear Box | 4 Speed |
Mileage (Internal) | 81 Kmpl |
Mileage – Owners Reported | 70 Kmpl |
2023 ஹீரோ HF Deluxe பைக் பல்வேறு மாறுபட்ட வேரியண்ட்களில் கிக் ஸ்டார்ட் மற்றும் செல்ஃப் ஸ்டாரட் வசதியும் பெற்ற ஆரம்ப ஆன்-ரோடு விலை ₹ 71,480 முதல் ₹ 82,340 வரை கிடைக்கின்றது.
2023 ஹீரோ HF 100 பைக் கிக் ஸ்டார்ட் செல்ஃப் ஆன்-ரோடு விலை ₹ 68,610 வரை கிடைக்கின்றது.