போதைப்பொருள் மாபியா கும்பல்களை பாதுகாக்கும் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் மாபியாவின் பின்னணியில் உள்ள பாதாள உலக குழு பிரபலத்திற்கு எதிராக விசாரணை நடத்தும் குழுக்களின் பிரதானி உட்பட அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் தலைவர்களுக்கு இந்த சிரேஷ்ட அதிகாரி ஏற்கனவே அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.