கத்தார் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெற்ற பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றது.
இந்த நிலையில்,தனது தலைமையிலான அணி வீரர்கள் உலக கோப்பை வென்றதை கௌரவப்படுத்தும் விதமாக, வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களுக்கு நினைவுப் பரிசை வழங்க மெஸ்ஸி திட்டமிட்டிருந்தார். இதற்காக 24 காரட் தங்கத்தால் ஆன 35 ஐபோன்களை ஆடர் செய்துள்ளதாகவும், இதற்காக 1.57 லட்சம் யுரோக்கள் செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.1.75 கோடியாகும்.
வீரர்களின் பெயர்கள், ஜெர்ஸி எண்கள் மற்றும் அணியுடன் பணியாற்றிய நிர்வாகிகளின் பெயர்களுடன் தங்கத்தால் தனித்துவமாக உருவாக்கப்பட்ட அந்த போன்கள் வீரர்களின் வீடுகளுக்கே பிரத்யேகமாக அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து ஐடிசைன் கோல்ட் நிறுவனத்தின் சிஇஓ பென் லியோனஸ் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மெஸ்ஸி ஐடிசைன் கோல்ட் நிறுவனத்தின் முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒருவர். கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு எங்கள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, உலக கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்க வேண்டும் என்றார்.
இதற்காகத் தங்கத்தால் ஆன ஐபோன் பரிந்துரைக்கப்பட்டது. இதை ஏற்ற அவர், தங்கத்தால் ஆன ஐபோன் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுமாறு தெரிவித்தாக அவர் கூறினார்.