கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசை கண்டித்து போராட்டம்: முன்னாள் முதல்வர் சித்தராமையாவை குண்டுக்கட்டாக கைது செய்தது போலீஸ்

கர்நாடகா: கர்நாடகாவில் ஊழல் புகாரில் சிக்கிய பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ வை கைது செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வீட்டை முற்றுகையிட்ட முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார். தாவணகெரே மாவட்டம் சென்னகிரி எம்.எல்.ஏ வாக இருந்த விருப்பக்‌ஷாவின் மகன் பிரஷாந்த் மாதல் இவர் சமீபத்தில் ரசாயன பொருட்கள் வாங்கும் டெண்டரை ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வழங்குவதற்காக ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லோக் ஆயுக்தா போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். பின்னர் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் கட்டு கட்டாக சுமார் ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் பதவியை ராஜினாமா செய்த விருபக்சப் பா தலைமறைவானார். இந்நிலையில் அவரை கைது செய்ய வலியுறுத்தியும், ஊழலுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதவி விலக வலியுறுத்தியும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் உள்ள முதலமைச்சர் வீடு நோக்கி சித்தராமையா மற்றும் மூத்த கட்சி தலைவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர், அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தியபோது சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.