விண்ட்சர் மாளிகையில் இருந்து வெளியேற இளவரசர் ஆண்ட்ரூவுக்கு கூறப்பட்டுள்ள நிலையில், தமக்கு மன்னருக்கான அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையுடன் சார்லஸ் மன்னரை அவர் தொந்தரவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னருக்கான அந்தஸ்து
பிரித்தானிய ராஜ குடும்பத்தில் நிதிச்சுமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, குடும்ப உறுப்பினர்களுக்கு அளிக்கும் ஆண்டு உதவித்தொகையை குறைக்கும் முடிவை எடுத்துள்ளது அரண்மனை.
@getty
அதன் ஒரு பகுதியாக தற்போது 30 படுக்கையறை கொண்ட விண்ட்சர் மாளிகையில் இருந்து இளவரசர் ஆண்ட்ரூ வெளியேற்றப்பட இருக்கிறார்.
ஆனால், மன்னருக்கான அந்தஸ்து தமக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ரீகல் எஸ்டேட்டை குறிவைத்து சார்லஸ் மன்னருக்கு இளவரசர் ஆண்ட்ரூ குடைச்சல் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, பால்மோரல் மாளிகை உட்பட முக்கிய சொத்துக்களை பராமரிக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தமக்கு முதன்மையான அந்தஸ்து வழங்க வேண்டும் என இளவரசர் ஆண்ட்ரூ கோரிக்கை விடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செயல்படும் ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் வரிசையில் தாம் இல்லை என்பதையும் மறந்து இளவரசர் ஆண்ட்ரூ செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் சார்லஸ் மன்னர் இதில் எதற்கும் உடன்படவில்லை என்றே கூறப்படுகிறது.
மன்னரின் முடிவில் மாற்றமில்லை
ஆண்ட்ரூவின் இரு மகள்கள் இந்த விவகாரத்தில் மன்னருடன் கலந்தாலோசித்துள்ளனர்.
ஆனால் மன்னரின் முடிவில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
@rex
பாலியல் துஸ்பிரயோக வழக்கில் 12 மில்லியன் பவுண்டுகள் செலவிட்ட பின்னர், இளவரசர் ஆண்ட்ரூவின் நிதியாதாரம் கடும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.
மட்டுமின்றி தமது முன்னாள் மனைவியுடன் இணைந்து வாங்கிய சுவிஸ் மாளிகையும் 17 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்றுள்ளார்.
இருப்பினும், ராணியாரின் உயில் இன்னமும் வெளிவரவில்லை என்றாலும், அதில் ஆண்ட்ரூவுக்கு பங்கிருக்கும் என்றே கூறுகின்றனர்.
விண்ட்சர் எஸ்டேட்டில் இருந்து ஹரி- மேகன் தம்பதியானது வெளியேற உத்தரவான பின்னர், அந்த ஐந்து படுக்கையறை கொண்ட மாளிகையில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது,
அதை அவர் மறுத்துள்ளதுடன், சார்லஸ் மன்னருக்கு தொடர்ந்து குடைச்சல் தருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.