செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நகர் சன்னதித் தெரு, பழைய புல எண்.29/11எ-ல் 1.06 எக்கர் மற்றும் 29/27-ல் 0.07 சென்ட் (புதிய ச.ண்.583/22-ல் 4800 சமீ பரப்பளவு) திருக்கழுக்குன்றம் சத்திரம் அருள்மிகு மற்றும் இடத்தின் வேதகிரீஸ்வரர் வருவாயினை திருக்கோயிலில் கொண்டு நடைபெறும் பிரம்மோற்சவத்தில் (சித்திரைப் பெருவிழா) 10 நாட்களுக்கும் திருக்கழுக்குன்றம் சன்னதித் தெருவில் அமைந்துள்ள சத்திரத்தில் அனைத்து வகுப்பினருக்கு உணவு அளித்தல் மற்றும் உற்சவம் செய்துவர வேண்டியது. மேலும் அறக்கட்டளை சொத்துக்களை எக்காலத்திலும் பராதீனம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் திருவாளர். இராஜகோபால் செட்டியார் என்பவரால் 1909-ஆண்டு உயில் சாசனம் எழுதி சமய அறக்கட்டளையை ஏற்படுத்தியுள்ளார்.
மேற்படி உயில் சாசனப்படி செய்ய வேண்டிய கட்டளைகளையும், உற்சவங்களையும் அறக்கட்டளையினை நிர்வகித்து வந்தவர்கள் செய்ய தவறிவிட்டனர். சத்திரத்தினையும் முறையாக பராமரிக்காமல் சத்திரத்தின் ஒரு பகுதியினை பல நபர்களுக்கு விற்பனை செய்தும், பட்டா மாற்றம் செய்தும் முறைகேடுகள் நடைபெற்றுள்ள விபரம் திருக்கோயில் நிர்வகத்திற்கு தெரியவந்ததன்பேரில், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ள அறக்கட்டளை நிலங்களை மீட்டு கட்டளைதாரரின் எண்ணப்படி தொடர்ந்து கட்டளையை நிறைவேற்றும் வகையில் துறையின் ஆணையர்களின் உத்தரவின்படியும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பொ.இலஷ்சுமி காந்த பாரதிதாசன் அவர்களின் உத்தரவுப்படி இத்திருக்கோயில் செயல் அலுவலர் தக்காராக நியமனம் செய்யப்பட்டு இன்று சுவாதீனம் எடுக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இச்சொத்தின் இன்றைய மதிப்பின்படி சுமார் 10.00 கோடி மேல் இருக்கும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.