திரிபுராவில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

திரிபுராவில் வரும் 8ம் தேதி நடைபெறும் பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.

60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், பாஜக 32 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான IPFT ஓரிடத்திலும் வெற்றி பெற்றன.

இதன்மூலம் ஆட்சியை  பாஜக கூட்டணி தக்க வைத்து கொண்டது. பின்னர் ஆளுநரை நேற்று சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர் மாணிக் சாஹா, புதிய அரசு வருகிற 8ம் தேதி பதவியேற்கும் எனத் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அகர்தலாவில் உள்ள விவேகானந்தா மைதானத்தில் புதிய அரசு பதவியேற்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.