ஜிம்மில் காதலித்து திருமணம்.. சின்சியாரிட்டியை காட்ட ஒரு அளவே இல்லையா.?! வைரல் புகைப்படம்.!

மதுரை செல்லூரில் வசித்து வந்த சரவணபாண்டி என்ற இளைஞர் அதே பகுதியில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பணிபுரியும் அன்னலட்சுமி என்ற பெண்ணும் பெண்களுக்கு உடற்பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார்.  

இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் அவர்களுக்கு காதல் மலர்ந்துள்ளது. இரு தரப்பு பெற்றோரிடம் தங்களது காதலை சொல்லி அவர்கள் திருமணமும் செய்தனர். 

செல்லூரில் இருக்கும், ஒரு திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடந்துள்ள நிலையில் வழக்கம் போல இவர்களும் வித்யாசமான போட்டோ சூட் என்ற பெயரில் தங்களது சின்சியாரிட்டியை காட்டியுள்ளனர். இருவரும் ஜிம் காதலர்கள் என்பதால் ஜிம்மிலேயே போட்டோ சூட் நடத்த முடிவு எடுத்தனர்.

அதன்படி மன அலங்காரத்திலேயே ஜிம்மிற்கு சென்று அங்கு இருவரும் ஒர்க்கவுட் செய்தவாறு போட்டோ சூட் நடத்தியுள்ளனர். இருவரும் காதல் செய்த இடத்திலேயே புதுமண பூரிப்பில் போட்டோ சூட் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.