இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது. அதன் துணை கொண்டு இந்தியாவில் பெரும்பாலான மக்கள் யுபிஐ வழியே சுலபமாக பண பரிமாற்றம் மேற்கொண்டு வருகின்றனர். நொடிப் பொழுதில் யுபிஐ வழியே பணம் அனுப்பவும், பெறவும் முடியும். இந்தியாவில் போன் பே, கூகுள் பே வழியில் அமேசான் பேவும் யுபிஐ சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் அமேசான் பேவுக்கு ரூ.3,06,66,000 கோடி அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் மற்றும் கேஒய்சி போன்ற விதிமுறை மீறல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007-ன் பிரிவு 30-ன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமேசான் தரப்பில் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி செயல்படுவதற்கு தாங்கள் உறுதி கொண்டிருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.