உக்ரைனின் பக்முத் நகரம் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா வசம் சிக்கலாம் என்ற நிலையில், அங்குள்ள சிறார்களை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெளியேறிவரும் அப்பாவி மக்கள்
உக்ரைனின் பக்முத் நகரம் கடும் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருந்த மக்கள், வெளியேறி வருகின்றனர்.
உக்ரைன் ராணுவத்தினரும் பொதுமக்களுக்கு உதவி வருகின்றனர்.
@getty
கடந்த நான்கு மாதங்களாக பக்முத் நகரம் மீது ரஷ்யா குறிவைத்து தாக்குதல் தொடுத்து வருகிறது.
ரஷ்ய படைகள் மட்டுமின்றி, தனியார் படையான வாக்னர் குழுவும் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வந்தது.
இந்த நிலையில் தான், பக்முத் நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக வாக்னர் தலைவர் அறிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி புடினிடம் பக்முத் நகரை ஒப்படைக்க இருப்பதாகவும் வாக்னர் தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் படைகளை மொத்தமாக அழிக்க இனி ஒரே ஒரு சாலை மட்டும் எஞ்சியுள்ளது எனவும் அவர் தமது டெலிகிராம் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
பக்முத் நகரில் இருந்து பொதுமக்கள் வாகனங்களில் வெளியேறுவது என்பது ஆபத்தில் முடியலாம் என குறிப்பிட்டுள்ள உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர், மக்கள் நடந்தே வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
@getty
மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளது
பக்முத் நகரம் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடும் பொதுமக்கள், ரஷ்ய படைகள் இதை திட்டமிட்டே முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மாதம் ஒருமுறை மட்டும் மனிதாபிமான அடிப்படையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும், மின்சாரம், குடிநீர் மற்றும் எரிவாயு என எதுவும் இல்லை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே உக்ரைனின் White Angels என்ற மீட்புக்குழு பக்முத் நகரில் இருந்து சிறார்கள் மற்றும் முதியோர்களை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
@getty