லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், இன்றையதினம் இலங்கையில் எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது வரை காணப்படும் எரிவாயுவின் விலை அவ்வாறே தொடரும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள போதிலும் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் முந்தைய அறிவிப்பு
இதேவேளை, மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஏதாவது விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின் அது 50 ரூபாவினால் குறைப்பு அல்லது அதிகரிப்பு என்ற வகையில் மேற்கொள்ளப்படும் எனவும் லிட்ரோ நிறுவனத்தை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.