புலம்பெயர் மக்களுக்கு எதிரான புதிய சட்டம்… மொத்தமும் தடுத்து நிறுத்தப்படும்: சுயெல்லா பிரேவர்மேன் உறுதி


போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம், இனி புலம்பெயர் மக்களின் படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டு, புதிய சட்டத்தால் பிரித்தானியாவில் தங்கியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார் சுயெல்லா பிரேவர்மேன்.

புலம்பெயர் மக்களுக்கு எதிராக

பிரித்தானிய உள்விவகார செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவிக்கையில், ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ள புலம்பெயர் மக்களுக்கு எதிராக இனி மனித உரிமைகள் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புலம்பெயர் மக்களுக்கு எதிரான புதிய சட்டம்... மொத்தமும் தடுத்து நிறுத்தப்படும்: சுயெல்லா பிரேவர்மேன் உறுதி | Suella Braverman Migrants Boats New Law

@PA

குட்டியான படகுகளால் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் நுழைந்துள்ள புலம்பெயர் மக்கள் இனி தங்குவதற்கு உரிமை கோரவும் முடியாமல் போகும்.
மட்டுமின்றி, புலம்பெயர் மக்களை பாதுகாப்பாக மூன்றாவது நாடு ஒன்றிற்கும் அனுப்பி வைக்கும் திட்டம் இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில், பல மாத விவாதங்களுக்கு பின்னர் இந்த பிரேரணையானது செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
பிரித்தானிய மக்கள் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர், இந்த விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றே மக்கள் விரும்புவதாக சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.

45,000 புலம்பெயர் மக்கள்

இதன்பொருட்டே, தாமும் பிரதமர் ரிஷி சுனக்கும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், நீங்கள் கைது செய்யப்பட்டு, துரிதமாக உங்களை வெளியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

2022ல் மட்டும் குட்டி படகுகளில் 45,000 புலம்பெயர் மக்கள் பிரித்தானியாவில் வந்துள்ளதாகவும், இது 2021ல் 28,000 என இருந்தது என்றும் கூறுகின்றனர்.

புதிய பிரேரணை அமுலுக்கு வரும் நிலையில் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர் மக்கள் கைது செய்யப்பட்டு, அடுத்த சில வாரங்களில் பாதுகாப்பான மூன்றாவது நாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.