திருப்பூர்: புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்கள் மூலம் வதந்தி பரப்பிய விவகாரம் தொடர்பாக பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக் குமார் , சிறப்பு பணி படை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் உள்ளிட்டோர் திருப்பூரில் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கோவைக்கு விமானம் மூலம் வந்த அவர்கள் திருப்பூர் வந்தடைந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வினீத், காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய், மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா, திண்டுக்கல் டிஐஜி அபினவ் குமார் மற்றும் தொழில்துறையினர், தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.