இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு புகழாரம்..!!

இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை அன்று சந்தித்திருந்தார். இது தொடர்பாக கேட்ஸ் நோட்ஸ் பிளாக் தளத்தில் அவர் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முக்கிய பிரபலங்களை அவர் சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை அவர் சந்தித்துள்ளார். “கொரோனா தொற்றுப் பரவலின்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பு மருந்துகள் மில்லியன் கணக்கான மக்களின் உயிரை காத்தது. மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் இன்னும் பிற நோய்களுக்கு மருந்தாக உதவி வருகிறது.

கோ-வின் (Co-WIN) உலகத்திற்கே முன்மாதிரி என பிரதமர் மோடி நம்புகிறார். அதை நானும் ஏற்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியை அவர் புகழ்ந்துள்ளார். குறிப்பாக கோ-வின் தளம் வழியே பில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி மற்றும் அதற்கான டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்தும் பேசியுள்ளார். நேற்று, இந்தியாவின் 5ஜி நெட்வொர்க் குறித்து அவர் புகழந்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.