தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் வட மாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 5, 2023
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் அச்சமடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.