மாசி மகத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கொள்ளிடம் ஆற்றில் திரண்ட மக்கள்!

மாசி மகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அணைக்கரை வடவார் தலைப்பில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு வந்த திரளான மக்கள் ஆடை மாற்ற இடம் இல்லாமல் அவதிப்பட்டனர். மறந்த திதியை மகத்தில் கொடுப்பது ஐதீகம். இதில் மாசி மாதம் வரும் மகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாசி மகத்தை முன்னிட்டு மூன்று மாவட்டங்கள் சந்திக்கும் இடமாக உள்ளது அணைக்கரை. இங்கு அரியலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது. 

ஆகையால் இந்த பகுதியில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மாசி மகத்தை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காலை முதல் வந்த வண்ணம் உள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள் என கூட்டம் அதிகரிக்கும் நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மக்கள் வெள்ளம் அலை மோதுகிறது. இதில் முன்னோர்களுக்கு பச்சரிசி, எள், கீரை வகைகள் காய்கறிகள் அனைத்தையும் வைத்து வழிபாடு செய்தனர்.

இதில் தர்ப்பணம் செய்ய வரும் பொதுமக்கள் நீராடி விட்டு உடைகளை மாற்ற வழி இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த பகுதியில் 3 மாவட்ட மக்கள் கூடும் இடமாக இருப்பதாலும், காலம் காலமாக தொடர்ந்து இங்கு நீத்தார் வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆகையால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இங்கு கழிப்பறை வசதி மற்றும் உடைகளை மாற்ற ஆண் பெண் என தனி அறைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.