திமுக – பாஜக போட்ட ரகசிய டீலிங்… திலிப் கண்ணன் உடைச்ச சீக்ரெட்!

தமிழ்நாடு பாஜகவில் (Tamil Nadu BJP) இருந்து அடுத்தடுத்து முக்கியப் புள்ளிகள் வெளியேறி வருகின்றனர். அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவாக இணைந்திருப்பவர் ஐடி விங் மாநில செயலாளர் திலிப் கண்ணன் (Dilip Kannan BJP). இவரிடம் ‘சமயம் தமிழ்’ சார்பில் சில கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அவர், அண்ணாமலை மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் அவரை பழிவாங்கும் நடவடிக்கைகள் கிடையாது.

அண்ணாமலை ஏற்பாடு

இங்கு சித்தாந்தவாதிகள் யாரும் பயணிக்க முடியாது. அண்ணாமலை உடன் இருப்பவர்களை கவனித்தால் கடந்த 10, 20 ஆண்டுகளாக தமிழ்நாடு பாஜகவில் பயணித்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். புதிது புதிதாக டீமை இறக்கியுள்ளனர். இவர்கள் மன ரீதியாக டார்ச்சர் செய்து மற்றவர்களை வெளியேற்றுகிறார்கள். என்னை போல் நிறைய பேர் மன அழுத்தத்தில் உள்ளே இருக்கின்றனர்.

போலீஸ் மைண்ட் செட்

இவர்கள் போலீஸ் மைண்ட் செட்டில் உள்ளனர். எடுத்த உடனேயே தூக்கிருவேன். தொலைச்சிடுவேன். அதை பண்ணிடுவேன். இதை பண்ணிடுவேன் என பேசுகிறார்கள். ஒரு தலைவர் என்பவர் நிர்வாகிகள் உடன் அனுசரித்து செல்ல வேண்டும். தட்டி கொடுத்து வேலை வாங்க வேண்டும். தலையில் அடித்து வேலை வாங்க கூடாது. நிறைய வேலை பார்த்துள்ளேன்.

நம்பர் ஒன் ஐடி விங்

தேசிய தலைமையே எங்களை அழைத்து நாட்டிலேயே நம்பர் ஒன்று ஐடி விங் என பாராட்டியுள்ளனர். அண்ணாமலையால் தான் கட்சி வளர்ந்தது என சொல்லவே முடியாது. தற்போதைய சூழலில் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு மிகவும் சிரமம். இதற்கு எந்த ஒரு தொகுதியும் விதிவிலக்கு கிடையாது. இவர்கள் போட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள்.

மதிக்கவே தெரியவில்லை

இவர்களுக்கு சித்தாந்தம் என்னவென்று தெரியவில்லை. மூத்த தலைவர்களை எப்படி மதிக்க வேண்டும் என தெரியவில்லை. மாவட்ட தலைவராக வந்த உடன் பழைய ஆட்களை ஓரங்கட்டி வெளியே தள்ள பார்க்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் சித்தாந்தவாதிகளாக இருப்பதால் அமைதியாக கட்சிக்குள்ளேயே காலம் தள்ளி வருகின்றனர்.

வார் ரூம் அட்ராசிட்டீஸ்

இதற்கு காரணம் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான். இவர்களுக்கு கீழ் வார் ரூம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. எல்லாம் சிறிய சிறிய பசங்க. வெளியே செல்பவர்களை டார்கெட் செய்து ஹேஷ்டேக் போட்டு தாக்குகிறார்கள். தமிழ்நாடு பாஜகவில் அடக்குமுறை அதிகமாக உள்ளது. அடுத்தகட்ட முடிவுகள் குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

சாராய அமைச்சர் டீலிங்

வேறு எந்த திட்டங்களும் தற்போதைக்கு இல்லை. அண்ணாமலை தலைமையில் தேர்தல் வெற்றி மிகவும் கடினம். இவர்கள் மறைமுகமாக
திமுக
உடன் நிறைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதங்களாக சாராய அமைச்சர் என அண்ணாமலை கூறவே இல்லை. ஏனெனில் ஒரு புரிதல் ஏற்பட்டு விட்டது. தலைவர் பதவியில் இருக்கும் அண்ணாமலை தன்னை மாற்றிக் கொண்டால் மீண்டும் கட்சியில் சேரும் சூழல் வரும் என்று திலிப் குமார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.