உத்தரகாசி: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 முறை நிலநலடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறினர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சமயலறையில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தன. ஜன்னல் மற்றும் கதவுகளில் இருந்து சத்தம் கேட்டதால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.5 புள்ளிகளாக பதிவாகியது.
உத்தகாசி மாவட்டத்தின் பத்வாரி பகுதியில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்துக்குப்பின் தொடர்ந்து இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது.