பிரித்தானியாவில் மூன்று இளம்பெண்கள் மாயமான விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: நொறுங்கிப்போன குடும்பங்கள்


பிரித்தானியாவில் வேல்ஸ் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் மாயமான 3 இளம்பெண்கள் உட்பட ஐவர் குழுவில் மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மரணமடைந்த நிலையில்

நியூபோர்ட் பகுதியில் அமைந்துள்ள Muffler இரவு விடுதிக்கு சென்ற Sophie Russon(20), Eve Smith(21), மற்றும் Darcy Ross(21) ஆகியோரே ஆண்கள் இருவருடன் மாயமானதாக தகவல் வெளியானது.

பிரித்தானியாவில் மூன்று இளம்பெண்கள் மாயமான விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: நொறுங்கிப்போன குடும்பங்கள் | Newport Tragedy Three Found Dead On Night Out

@getty

குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த பொலிசார், தற்போது விபத்தில் சிக்கிய வாகனம் ஒன்றை மீட்டுள்ளனர்.
இதில் மூன்று இளம்பெண்களும் மரணமடைந்த நிலையிலும், ஆண்கள் இருவரும் காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த இரு ஆண்களையும் அருகாமையில் உள்ள மருத்துவனையில் சேர்ப்பித்துள்ளனர். இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

பிரித்தானியாவில் மூன்று இளம்பெண்கள் மாயமான விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: நொறுங்கிப்போன குடும்பங்கள் | Newport Tragedy Three Found Dead On Night Out

Credit: Media Wales

நண்பர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, வெள்ளிக்கிழமை இரவு Muffler இரவு விடுதியில் கடைசியாக இவர்களை பார்த்துள்ளதாகவும், ஆனால் அதன் பின்னர் அவர்கள் சமூக ஊடக பக்கத்திலும் காணப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்தில் சிக்கிய கார்

இந்த நிலையில் தான், அவர்களின் கார் சாலை விபத்தில் சிக்கியுள்ளது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, வாகனம் தூக்கி வீசப்பட்டதால், பொதுமக்கள் பார்வையிலும் சிக்காமல் போயுள்ளது.

இதனிடையே, Muffler இரவு விடுதியில் இருந்து மூன்று பெண்கள் உட்பட ஐவரும் Trecco Bay விடுமுறை பூங்காவிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் இந்த விபத்தானது குறிப்பிட்ட பூங்காவிற்கு செல்லும் வழியில் நேர்ந்துள்ளதா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை.

பிரித்தானியாவில் மூன்று இளம்பெண்கள் மாயமான விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: நொறுங்கிப்போன குடும்பங்கள் | Newport Tragedy Three Found Dead On Night Out

Credit: Facebook

மேலும், குறிப்பிட்ட விபத்து தொடர்பான காணொளிகள் அல்லது சாட்சிகள் எவரேனும் தகவல் தெரிவிக்க விரும்பினார் பொலிசாரை அணுக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.