தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்த பூலையா, மகாராஜன் ஆகியோருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாலில் கலப்படம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலப்படம் செய்யப்பட்ட 1,500 லிட்டர் கலப்பட பாலை பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.