வாலிபர் பின்தொடர்வதாக நடிகை புகார்: போலீஸ் விசாரணை

ஐதராபாத்: ஓ பில்லா நீ வல்லா, பாக்ய நகர வீட்டில் கம்மத்து உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தவர் ஷாலு சவுதாசியா. ஐதராபாத் கேபிஆர் பூங்காவில் 2021ம் ஆண்டில் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது மர்ம நபர்கள் அவரை தாக்கி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து தப்பித்த ஷாலு, அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தார். மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு, படங்களில் நடிப்பதையும் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது அதே இடத்துக்கு நடை பயிற்சி செய்ய ஷாலு செல்கிறார். அப்போது ஒரு வாலிபர் தன்னை பின்தொடர்வதாக போலீசில் புகார் செய்துள்ளார்.

போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது ‘நானும் நடைபயிற்சிக்குதான் வந்தேன்.  ஷாலுவை பின்தொடரவில்லை என அந்த வாலிபர் மறுத்துள்ளார். இதையடுத்து பூங்காவில் இருந்த கேமராக்களை போலீசார் பார்வையிட்டனர். அப்போது ஷாலுவை அந்த வாலிபர் பின்தொடரவில்லை என தெரிந்தது. இது குறித்து போலீசார் கூறும்போது, ‘ஏற்கனவே நடந்த சம்பவத்தால் ஷாலு சவுதாசியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து அவர் மீளவில்லை. எனவேதான் யாரோ தன்னை பின்தொடர்வதாக அவர் அஞ்சுகிறார். இது தொடர்பாக அவருக்கு கவுன்சலிங்கிற்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறோம்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.