ஹோண்டா நிறுவனம் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கிற்கு போட்டியாக குறைந்த 100சிசி என்ஜின் கொண்ட பைக் மாடலை விற்பனைக்கு மார்ச் 15 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக Shine 100 பைக் தொடர்பான டீசரை வெளியிட்டுள்ளது. தற்பொழுது ஹோண்டா 110 சிசி என்ஜின் கொண்ட மாடல் மட்டுமே குறைந்த விலையிங் விற்பனை செய்கின்றது.
ஹோண்டா Shine 100
இந்நிறுவன டீஸர்களில் ‘ஷைனிங் ஃபியூச்சர்’ மற்றும் ‘ஹோண்டா 100’ போன்ற முக்கிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இது ஷைன் பிராண்டின் கீழ் அவர்களின் 100சிசி பைக்காக இருக்கும் என கருதப்படுகின்றது. ஹோண்டாவின் போர்ட்ஃபோலியோவில் தற்போது 100சிசி மோட்டார்சைக்கிள் இல்லை.தற்பொழுது 110சிசி கம்யூட்டர் பைக்குகள் மட்டுமே உள்ளன.
100சிசி கம்யூட்டர் அலாய் வீல்கள், முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் பெற்று ஷைன் 125 பைக்கினை போன்ற அமைப்பினை பெற்றாலும் இந்த பைக் 125சிசி ஷைனை விட எளிமையாக இருக்கலாம். அதன் நீளமான, தட்டையான ஒற்றை இருக்கையில் வரக்கூடும்.
ஹீரோவின் 100சிசி வரிசை ஸ்பிளெண்டர் பிளஸ், HF டீலக்ஸ், HF 100 மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 போன்ற பைக்குகளுக்கு கடும் சவாலினை ஹோண்டா Shine 100 ஏற்படுத்தலாம்.