Mayilsamy: இறந்த மயில்சாமி மீது சிங்கமுத்து பரபர குற்றச்சாட்டு: ரசிகர்கள் ஆதரவு

இறந்த நடிகர் மயில்சாமி மீது சிங்கமுத்து தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு மிகவும் சரியானது என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

​மயில்சாமி​

நகைச்சுவை நடிகரும், தீவிர சிவ பக்தருமான மயில்சாமி சிவராத்திரி நாளில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் இருக்கும் மேகநாதேஸ்வரர் கோவிலில் இரவு முழுவதும் இருந்தார். அதிகாலையில் வீட்டிற்கு சென்ற நேரத்தில் அவர் உயிர் பிரிந்துவிட்டது. இந்நிலையில் மயில்சாமி பற்றி அவரின் நண்பரான சிங்கமுத்து பேசியிருக்கிறார்.


சிங்கமுத்து​பேட்டி ஒன்றில் சிங்கமுத்து கூறியதாவது, என் நண்பன் மயில்சாமி இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். குலசாமி கோவிலுக்கு சென்றிருந்ததால் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. சிவராத்திரி அன்று உயிரிழப்பது அனைவருக்கும் கிடைக்காது. அவர் சிவன் மீது தீரா பக்தி கொண்டிருந்தார். நானும், அவரும் சேர்ந்து ஒரு சில படங்களில் தான் நடித்திருக்கிறோம். ஆனால் சிவன் கோவில்களில் நான் பாடும்போது தான் எங்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது என்றார்.
​உதவி​மயில்சாமி எம்.ஜி.ஆர். பக்தர். அவரை போன்றே மற்றவர்களுக்கு உணவு வழங்கி வந்தார். மயில்சாமியிடம் பெரிதாக காசு பணம் இல்லை. இருப்பினும் உதவினார். தன் வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து உதவியவர் மயில்சாமி என சிங்கமுத்து மேலும் தெரிவித்துள்ளார்.
​குற்றச்சாட்டு​மற்றவர்களுக்கு ஓடியோடி உதவி செய்த மயில்சாமி தன் உடல்நலத்தை பேணவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டுவேன். அவர் இறந்தாலும் குற்றம் சாட்டுவேன். நீண்ட நாள் தர்மம் செய்ய வேண்டிய நீ ஏன் உன் உடம்பை பார்த்துக் கொள்ளாமல் போய்விட்டாய் என்று குற்றம் சாட்டுவேன் என்றார் சிங்கமுத்து. அவர் மயில்சாமி பற்றி சொல்வது மிகவும் சரி என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
​கடைசி ஆசை​கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் இருக்கும் சிவலிங்கத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலாபிஷேகம் செய்ய வேண்டும், அதை தான் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது தான் மயில்சாமியின் கடைசி ஆசை. இந்த ஆசையை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் டிரம்ஸ் சிவமணி. இதையடுத்து மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்த வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

​Mayilsamy: கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த மயில்சாமி: நிறைவேற்றி வைப்பாரா ரஜினி?

​ரஜினி​மயில்சாமியின் கடைசி ஆசை குறித்து நானும் கேள்விப்பட்டேன். டிரம்ஸ் சிவமணியிடம் பேசி விபரம் பெற்றுவிட்டு மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றி வைப்பேன் என ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்தார். மயில்சாமி கடைசியாக தனக்கு போன் செய்தபோது எடுத்துப் பேச முடியாமல் போனது குறித்து வருத்தப்பட்டார் ரஜினிகாந்த்.

​Rajinikanth, Mayilsamy:மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்: ரஜினி வாக்குறுதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.