போலி தாக்குதல் வீடியோ பதிவு – பீகார் இளைஞர் கைது..!

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக பீகார் மாநில இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ பரவலால் எழுந்துள்ள அசாதாரண சூழலைத் தொடர்ந்து பீகார், ஜார்கண்ட் மாநிலங்கள் தனிகுழுக்களை அமைத்து தமிழகத்தில் ஆய்வு செய்து உண்மை நிலைமையை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், இந்த வீடியோக்களை பீகாரைச் சேர்ந்த ரூபேஸ்குமார் என்ற இளைஞர் ட்விட்டரில் பதிவிட்டதை கண்டறிந்த திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார், அந்த வீடியோக்களை அகற்ற ரூபேஸ்குமாருக்கு அறிவுறுத்தினர்.

எனினும், வீடியோக்களை அகற்றாததோடு, தெலுங்கானாவிற்கு தப்பிச் சென்றவரை தனிப்படையினர் கண்டுபிடித்து கைது செய்து திருப்பூருக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.