மாஸ் காட்டும் பெண் கதாபாத்திரங்களை கொண்ட டாப் 10 வெப் சீரிஸ் & படங்கள்!

பெர்மனெண்ட் ரூம்மேட்ஸ்:

தி வைரல் ஃபிவரால் (TVF) உருவாக்கப்பட்ட ரொமான்டிக் காமெடி வெப் தொடர் தான் ‘பெர்மனெண்ட் ரூம்மேட்ஸ்’.  3 ஆண்டுகளாக லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அமெரிக்காவில் இருந்து திரும்பிய தனது காதலனை திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் கதை தான் இது.  இதில் தான்யா என்கிற கதாபாத்திரத்தில் நிதி சிங் நடித்திருந்தார், இந்த கதையின் வலுவான பெண் கதாபாத்திரம் தான் தான்யா.  இதனை டிவிஎப் பிளே மற்றும் ஆஹாவில் பார்க்கலாம்.

சாக்ரெட் கேம்ஸ்:

சாக்ரெட் கேம்ஸ் நெட்ப்ளிக்சின் இன் கேம் சேஞ்சராக இருந்தது.  இந்த படத்தை விக்ரமாதித்யா மோத்வானி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் அஞ்சலி மாத்தூர் மற்றும் குக்கூ என்கிற இரண்டு வலுவான பெண் கதாபாத்திரங்கள் உள்ளது.  அஞ்சலி மாத்தூர் கதாபாத்திரத்தை ராதிகா ஆப்தேவும், குக்கூ கதாபாத்திரத்தை குப்ரா சைட்ஸும் ஏற்று நடித்திருந்தனர்.  இதனை நெட்ப்ளிக்சில் பார்க்கலாம்.

மேட் இன் ஹெவன்:

ஜோயா அக்தர் இயக்கத்தில் வெளியான ‘மேட் இன் ஹெவன்’ தொடர் நல்ல வரவேற்பை பெற்றது, இதில் தாரா கண்ணன் என்கிற வலுவான பெண் கதாபாத்திரம் உள்ளது.  தாரா கண்ணன் கதாபாத்திரத்தை சோபிதா துளிபலா நடித்திருந்தார்.  இந்த தொடரில் தாரா தைரியமானவள், மன்னிப்பு கேட்காதவள் போன்ற குணங்களை கொண்ட பெண்.  இதனை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.

ஆர்யா:

2020ம் ஆண்டின் பிரபலமான வெப் தொடராக இருந்தது ‘ஆர்யா’, இந்த தொடரின் மூலம் நடிகை சுஷ்மிதா சென் மறுபிரவேசம் செய்தார்.  ஆர்யா சரீன் என்கிற வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த கதாபாத்திரம் ஒரு அக்கறையுள்ள மனைவி, இரக்கமுள்ள தாய் என்பதை காட்டுகிறது.  இதனை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

டெல்லி க்ரைம்:

டெல்லியில் நடைபெற்ற நிர்பயா பிரச்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது தான் இந்த ‘டெல்லி க்ரைம்’.  இந்த தொடரை ரிச்சி மேத்தா இயக்கியிருந்தார், டிசிபி வர்த்திகா சதுர்வேதி என்கிற வலுவான பெண் கதாப்பாத்திரத்தில் ஷெஃபாலி ஷா நடித்திருந்தார்.  இதனை நெட்ப்ளிக்சில் பார்க்கலாம்.

தி ஃபேமிலி மேன்-2:

சமந்தா நடிப்பில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்-2’ தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, இதில் ராஜி என்கிற வலுவான பெண் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார்.  இந்த தொடரும, சமந்தாவின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றது.

மேரி கோம்:

பல விருதுகளை வென்ற குத்துசண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் இந்த ‘மேரி கோம்’ படம்.  இதில் மேரி கோமாக ப்ரியங்கா சோப்ரா நடித்திருந்தார், இந்த படத்தை நெட்ப்ளிக்சில் பார்க்கலாம்.

பிங்க்:

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ திரைப்படம் மூன்று பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.  இந்த படத்தை தழுவி தான் தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் எடுக்கப்பட்டது.  இபபடத்தை ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

குஞ்சன் சக்சேனா:

‘குஞ்சன் சக்சேனா’ படத்தில் ஜான்வி கபூர் இந்திய விமானப்படை அதிகாரியாகவும், ஹெலிகாப்டர் பைலட் ஆகவும் நடித்து பாராட்டை பெற்றிருந்தார்.  இந்த படத்தை நெட்ப்ளிக்சில் பார்க்கலாம்.

மிமி:

லக்ஷ்மன் உதேக்கர் இயக்கத்தில் வெளியான காமெடி தொடர் தான் ‘மிமி’.  க்ரித்தி சனோன் தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இதனை நெட்ப்ளிக்சில் பார்க்கலாம்.

தப்பாட்:

அனுபவ் சின்ஹா இயக்கத்தில், டாப்ஸி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ‘தப்பாட்’.  இந்த படம் ஆணாதிக்கம் மற்றும் உறவில் ஏற்படும் சிக்கல்களை கூறுகிறது.  இதனை அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.