நிதி நிறுவன அதிபரை கடத்தி 3 நாட்களாக விடுதியில் அடித்து கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது..!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே, நிதி நிறுவன அதிபரை கடத்திச் சென்று அடித்து கொலை செய்ததாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3ந் தேதி சரவணனை மர்ம கும்பல் ஒன்று காரில் செம்மேடு பகுதிக்கு கடத்தி சென்று விடுதி அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டியதால், செல்போனில் மனைவி சத்யாவை தொடர்பு கொண்ட சரவணன் பணத்தை ஏற்பாடு செய்ய சொல்லி உள்ளார்.

இதனிடையே மூன்று நாட்கள் தாக்குதலில் சரவணன் உயிரிழந்ததால் மர்மக்கும்பல் தப்பியுள்ளது.

விடுதி மேலாளர் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு, நாகராஜ், வினோத், ஜோசப், நவீத், நிஷாந்த் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், நிதி நிறுவன அதிபர்கள் நாகராஜ், வினோத் ஆகியோர் தலா பத்து லட்சம் வீதம் சரவணனிடம் கொடுத்ததாகவும், அதற்கான கமிஷன் பணத்தையும் தராமல், கொடுத்த பணத்தையும் தராததால், நைசாக பேசி அழைத்து சென்று அடித்ததில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.