திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இன்று தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய வெற்றியை தாங்கி கொள்ள முடியாமல் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதில் யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. யார் இதை செய்கிறார்களோ, அவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது அணி உருவாகாமல் இரண்டு அணியோடு இருக்க வேண்டும் என்ற கலைஞரின் நோக்கத்தை முறியடிக்கும் விதமாக இப்படிப்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
வடமாநிலத்தவர்கள் மீது திமுக தொடர்ந்து வெறுப்பு பிரசாரத்தை செய்ததால் தான் இப்படிப்பட்ட பிரச்சனை எழுந்ததாக பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டை முன் வைக்கிறது. நாங்கள் ஒருபோதும் வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதில்லை. விருப்பு பிரசாரத்தில் தான் ஈடுபடுகிறோம் என்றார். மேலும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதி திட்டம் நடப்பதாக நாகர்கோவிலில் முதல்வர் பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு, எங்களை விட முதல்வருக்கு அதிக செய்திகள் தெரியும் என்றார்.