இந்தியாவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சருக்கு வரவேற்பு, ஜேர்மன் அமைச்சருக்கு புறக்கணிப்பா?: எழுந்துள்ள சர்ச்சை


இந்தியா வந்த ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அவமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகிவருகின்றன.

நடந்தது என்ன? 

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் G20 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்காக இந்தியா வந்திருந்தார் ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock.

அவரை இந்திய அதிகாரிகள் முறைப்படி வரவேற்கவில்லை என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

அதுவும், ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergei Lavrovக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் புறக்கணிக்கப்பட்டதாக செய்திகள் பரவத் துவங்கின.

 ஜேர்மன் தூதர் விளக்கம்

இந்நிலையில், இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதாவது, ஜேர்மன் வெளியுறவு அமைச்சரின் விமானம் திட்டமிட்ட நேரத்துக்கு முன்னதாகவே புதுடில்லியை வந்தடைந்ததாகவும், ஆகவே, சற்று நேரம் விமானத்திலேயே இருக்குமாறு வெளியுறவு அமைச்சரை ஜேர்மன் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாகவும் இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் Philipp Ackermann விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சருக்கு வரவேற்பு, ஜேர்மன் அமைச்சருக்கு புறக்கணிப்பா?: எழுந்துள்ள சர்ச்சை | India Welcomes Russian Foreign

image – PTI File Photo)(HT_PRINT

அப்படி விமானத்தில் காத்திருக்கும்போது தனது காலை உணவை முடித்துக்கொண்ட Annalena, தானாகவே விமானத்திலிருந்து வெளியேறி கூட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்ல முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார் Ackermann.

ஆக, அது இந்தியாவின் தவறு அல்ல, ஜேர்மன் தரப்பு பிரச்சினைதான் என தெரிவித்துள்ளார் Ackermann. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.