இத்தாலியில் போட்டி போட்டு அசுரவேகத்தில் சென்ற இரு ஃபெராரி கார்கள் விபத்தில் சிக்கி தீக்கிரையாயின. அன்கோனா என்ற இடத்தில் பெல்ஜியத்தைச் சேர்ந்தவரும், பின்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் தாங்கள் வைத்திருந்த விலை உயர்ந்த ஃபெராரி கார்களில் போட்டி போட்டு ஓட்டிச் சென்றனர்.
சாலை திருப்பத்தில் வளைவதற்கு பதில் காற்றில் பறந்து வந்த இரு கார்களும் அருகில் இருந்த வீட்டு சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாயின.
அடுத்த சில நொடிகளில் கார் ஓட்டுநர்கள் இருவரும் சிறு சிறு காயங்களுடன் காரில் இருந்து தப்பித்துக் கொள்ள, இரு கார்களும் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தன.