வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மேட்ரிட் :ஸ்பெயினில், நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் 40 சதவீதம் பெண்கள் இடம்பெற வேண்டும் என்ற சட்டத்தை அந்நாட்டு அரசு நடைமுறைபடுத்த உள்ளது.
உலகம் மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், பெண்களுக்கான சலுகைகளை பல்வேறு நாடுகளும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஐரோப்பிய நாடான ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் வெளியிட்ட அறிக்கை:
பாலின இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
அதன்படி, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும், 250க்கும் அதிகமான ஊழியர்களை உடைய நிறுவனங்களின் நிர்வாக குழுவில், 40 சதவீதம் பெண்களை நியமிக்க வேண்டும்.
மேலும், தேர்தலில் போட்டியிடுவதிலும், அமைச்சரவையிலும் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க இந்த சட்டம் வழிவகுக்கும்.
சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு சமபங்காக இருக்க வேண்டுமெனில், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அவர்கள் பாதிக்கு பாதி அங்கம் வகிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement