கடலூர்: மாசிமக திருவிழாவை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த தீர்த்தவாரிக்கு நேற்று பல்வேறு கோயில்களில் இருந்து சுவாமிகள் எடுத்து வரப்பட்டன. இதில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமான சுவாமிகள் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் சிறப்பு அலங்காரத்தில் அழைத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிலையில், கடலூர் முதுநகர் சிப்பாய் தெரு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சைக்கிளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டவே சைக்கிளில் அம்மனை அழைத்து வந்ததாக தெரிவித்தனர்.