செயற்கை கோளை சுமந்துச் சென்ற ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த ராக்கெட்டை ஜப்பான் விண்ணிலேயே அழித்துள்ளது.
H3 ராக்கெட் மூலமாக பேரிடர் மேலாண்மை நில கண்காணிப்பு செயற்கைக்கோளான ALOS-3 தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டின் இரண்டாம் நிலை இயந்திரத்தில் எரிபொருள் எரியாததால் அதனை விண்ணிலேயே அழித்து விட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
குறித்த செயற்கைகோளில், வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்ட அகச்சிவப்பு சென்சார் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.