வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியதை தொடர்ந்து, இதை பற்றி விசாரணை செய்ய பீகார் அதிகாரிகள் குழு ஒன்று தமிழகத்திற்கு வந்தது. பீகார் அதிகாரிகள் கோயம்பத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்திவிட்டு தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியாளர்கள் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் பின், சென்னை தலைமைச் செயலகத்திற்கு விரைந்த பீகார் மாநில அதிகாரிகள் குழு தலைமைச் செயலாளருடன், இப்பிரச்சினை குறித்து தீவிர ஆலோசனர். இந்த ஆலோசனைக்கு பின்னர், பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், தனிப்பட்ட முறையில் பீகார் மாநில தொழிலாளர்களிடம் பேசி அவர்களது கருத்துக்களை கேட்டோம். தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களின் அலைபேசியை ஆய்வு செய்தோம். அதில் அவர்களுக்கு வந்த செய்திகள் குறித்து ஆலோசித்தோம்.
வைரலான போலி வீடியோக்கள் குறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்று தான் பீகார் மாநில தொழிலாளிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.” என்று பேசியுள்ளார்.