“விஜய் படத்தைதான் மகனுக்கு முதலில் காண்பிப்பேன்” – பிரபல நடிகை ஓபன் டாக்!!

தனது மகனுக்கு எட்டு வயது ஆனபிறகு தாமும், விஜய்யும் சேர்ந்த நடித்த துப்பாக்கி படத்தைதான் முதலில் காண்பிப்பேன் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை காஜல் அகர்வால் தனது நீண்டகால நண்பரான கௌதம் கிட்ச்லுவை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2022இல் ஆண் குழந்தை பிறந்தது.

மகனுக்கு அவர்கள் நீல் கிட்ச்லு என்று பெயரிட்டுள்ளனர். காஜல் அகர்வால் தனது மகனின் படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது மகனுக்கு முதலில் காண்பிக்க உள்ள திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

சமீபத்திய நேர்காணலில் அவர், ஸ்கிரீன் டைமை கட்டுப்படுத்துவது பற்றியும், தனது மகன் எட்டு வயது வரை படங்கள் பார்ப்பதையோ அல்லது ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்துவதையோ அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

நீலுக்கு 8 வயது ஆனவுடன் தான், படங்களைப் பார்க்க அனுமதிப்பேன் என்றும், தன் மகனுக்குக் காண்பிக்கும் முதல் படம் ‘துப்பாக்கி’ என்றும் காஜல் தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படமான ‘துப்பாக்கி’ மாபெரும் வெற்றி பெற்றது.

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிக வாய்ப்புகளைப் பெற்றதால், விஜய் நடித்த துப்பாக்கி படம் காஜலின் வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. எனவேதான் தனது இதயத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கும் துப்பாக்கி படத்தை தனது மகன் முதலில் பார்க்க வேண்டும் என்று காஜல் விருப்பம் தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.