AK62: உங்ககூட நான் படம் பண்ணியே ஆகணும்..முன்னணி இயக்குனருக்கு அன்பு கட்டளையிட்ட அஜித்..!

​அஜித்
​ஆரம்பம் அஜித் இன்று உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் அவரின் ஆரம்பகாலம் சற்று கடினமாகவே இருந்துள்ளது. முதல் வெற்றி படத்திற்காக அஜித் பல வருடங்கள் காத்திருந்தார். அதன் பின் ஒருவழியாக ஆசை என்ற படத்தின் மூலம் திருப்புமுனையை பெற்றார் அஜித். அதன் பின் வெளியான காதல் கோட்டை தேசிய விருதை அள்ளியது. இதைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான ஐந்து படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது. 1997 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தோல்வி படங்களாக அமைந்தன. இதன் காரணமாக அப்சட்டில் இருந்த அஜித் சரியான இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருந்தார்

​தொடர் தோல்விகள் ஆசை, காதல் கோட்டை படத்திற்கு பிறகு அஜித் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தார். 1997 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் ராசி, நேசம், ரெட்டைஜடை வயசு, உல்லாசம், பகைவன் என ஐந்து திரைப்படங்கள் வெளியாகின. மிகவும் எதிர்பார்த்து அஜித் நடித்த இத்திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. குறிப்பாக அமிதாப் பச்சனின் தயாரிப்பில் அஜித் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான உல்லாசம் திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்தார் அஜித். ஆனால் அப்படம் அவரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இதன் காரணமாக எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்தே தீரவேண்டும் என்ற முடிவில் இருந்தார் அஜித்

​கஷ்டகாலம் அஜித் தன் திரைவாழ்க்கையில் 1997 – 1998 ஆகிய காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தார். வெளியான படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. இதையடுத்து அஜித் விநியோகஸ்தராக களமிறங்கினார். அதிலும் அவருக்கு நஷ்டமே ஏற்பட்டது. இது போதாது என அஜித் கார் பந்தயத்தில் ஈடுபட்டு அவருக்கு மிகப்பெரிய விபத்தும் ஏற்பட்டது. இதனால் மனதளவிலும், உடலளவிலும் அஜித் பல வலிகளை சுமந்து வந்தார். இருந்தாலும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு தன்னால் திரும்பமுடியும் என தன் மீது அதீத நம்பிக்கை வைத்து போராடி வந்தார் அஜித். அந்த போராட்டத்திற்கு கிடைத்த பரிசு தான் அஜித் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்

​சுந்தர் சி இயக்கத்தில் அஜித்தின் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வர ஒரு நாள் அஜித் இயக்குனர் சுந்தர் சியை சந்தித்தார். அப்போது சுந்தர் சி தன் படவேளை காரணமாக ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்துள்ளார். அப்போது திடீரென அஜித் சுந்தர் சியிடம் வந்து நான் உங்கள் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தே தீரவேண்டும் என அன்பாக கட்டளை போட்டாராம். அஜித்தே வந்து கேட்கிறாரே என்ற எண்ணத்தில் அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்த சுந்தர் சி அவரை வைத்து உன்னை தேடி என்ற படத்தை இயக்கினார். அப்படம் என்னதான் வெற்றி பெற்றாலும் அதன் பிறகு வெளியான அஜித்தின் வாலி படத்தின் வெற்றி உன்னை தேடி படத்தின் வெற்றியை மறக்கச்செய்தது என்றார் சுந்தர் சி. அந்த காலகட்டத்தில் சுந்தர் சி கார்த்திக், ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்கி வெற்றிபெற்று வந்தார். எனவே தன்னை வெற்றிப்பாதைக்கு கொண்டு வர சுந்தர் சி தான் சரியான இயக்குனர் என கருதிய அஜித் அவரின் இயக்கத்தில் நடித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.