நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து , தமிழ் புலிகள் அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தக்கட்சியினர் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் புலிகள் அமைப்பு சார்பில் சீமானை கண்டித்து பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பங்கேற்ற வன்னியரசு தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்து எழுந்து சென்று சிலர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக வன்னியரசு குற்றஞ்சாட்டினார்
அதற்குள்ளாக பலர் கூட்டத்தில் இருந்து எழுந்து சாலையை நோக்கிச் ஓடிச்சென்றதால், தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் மேடையில் இருந்து இறங்கி கீழே வந்தார். கடைசி வரிசையில் இருந்த சிலர் மது போதையில் அடங்க மறுத்து… அத்துமீறி… அவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது
போதையில் சாலையை நோக்கி சென்றவர்களை , அந்த கட்சியின் முன்னனியினர் தலையில் தட்டி கூட்டத்துக்குள் கொண்டு வந்து சேர்த்தனர்.
சிலர் எதற்காக வந்தோம் என்பது தெரியாமல் சேர்களை கையில் தூக்கிக் கொண்டு தன்னிலை மறந்து நின்றனர்.
இந்த கலாட்டா குறித்து போலீசாரிடம் விசாரித்து தெரிந்து கொண்ட வன்னியரசு, அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.