வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹட்டன் பெடரல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் சுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நீதித்துறை செனட் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அருண் சுப்ரமணியம், சிவில் வழக்குகளில் நேரடியாக வாதாடியதுடன், நீதித்துறையில் அனைத்து மட்டத்திலும் பணிபுரிந்துள்ளார். நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கு நீதிபதியாக செல்லும் அவர், அங்கு நியமிக்கப்படும் தெற்கு ஆசியாவை சேர்ந்த முதல் நீதிபதி என்ற பெருமையை பெறுகிறார் எனக்கூறியுள்ளது.
முன்னதாக கடந்த 2022 ம் ஆண்டு, நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிபதியாக அருண் சுப்ரமணியனை நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்திருந்தார்.
2001 ல் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலையில் பிஏ பட்டம் பெற்ற அவர், 2004 ம் ஆண்டு, கொலம்பியா சட்ட பள்ளியில் ஜூரிஸ் டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். சுஸ்மன் காட்ப்ரே எல்எல்பி என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் அவர், 2007 முதல் அங்கு பணியாற்றி வருகிறார். 2004 முதல் 2005 வரை மேல்முறையீட்டிற்கான இரண்டாவது சர்க்யூட் நீதிபதி ஜட்ஜ் டென்னிசின், சட்ட உதவியாளராகவும், 2005 முதல் 2006 வரை நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதி ஜார்ஜ் லின்ச்சின் சட்ட உதவியாளராகவும், 2006 முதல் 2007 வரை உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் படேரின் சட்ட உதவியாளராகவும் அருண் சுப்ரமணியம் பணிபுரிந்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement