சட்டவிரோத புலம்பெயர் விவகாரம்… முறியடிப்போம்: பிரதமர் ரிஷி சுனக் சூளுரை


பிரித்தானியா எதிர்கொள்ளும் சிறு படகுகள் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ‘தேவையான அனைத்தையும் செய்ய இருப்பதாக’ பிரதமர் ரிஷி சுனக் சபதம் செய்துள்ளார்.

ரிஷி சுனக் சபதம்

பிரித்தானிய அரசு முன்னெடுக்கும் புதிய சட்டவிரோத புலம்பெயர் பிரேரணைக்கு எதிராக ஆதரவாளர்கள் அமைப்புகள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நாம் வெல்வோம் என பிரதமர் ரிஷி சுனக் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத புலம்பெயர் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தேவையான அனைத்தையும் செய்வதாகவும் அவர் சபதம் செய்தார்.
இதற்காக பிரித்தானியா அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கும் என்றார்.

சட்டவிரோத புலம்பெயர் விவகாரம்... முறியடிப்போம்: பிரதமர் ரிஷி சுனக் சூளுரை | Small Boats Crisis Rishi Sunak Vows @ getty

தற்போதைய சூழலில் இது கட்டாயம் என குறிப்பிட்டுள்ள பிரதமர் சுனக், மனித உரிமைகள் என்ற கோணத்தில் இதை அணுக முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிட்டு, நீங்கள் அடைக்கலம் கோர முடியாது எனவும், உதவிகள் பெற முடியாது எனவும், நீங்கள் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் இனி தங்கவே முடியாது எனவும் பிரதமர் சுனக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிறு படகுகள் வருகை

அரசாங்கம் அமுலுக்கு கொண்டுவரும் பிரேரணை முறையாக செயல்பட அனுமதிக்கப்பட்டால் கண்டிப்பாக எவரும் சட்டவிரோதமாக வரமாட்டார்கள் எனவும் சிறு படகுகள் வருகையும் நிறுத்தப்படும் என்றார். 

சட்டவிரோத புலம்பெயர் விவகாரம்... முறியடிப்போம்: பிரதமர் ரிஷி சுனக் சூளுரை | Small Boats Crisis Rishi Sunak Vows @skynews

மட்டுமின்றி, என்ன நிறைவேற்ற முடியும் என்பதை மட்டுமே நான் உறுதியளித்திருக்கிறேன், நான் உறுதியளித்ததை இன்று நிறைவேற்றுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன் என்றார் சுனக்.

நாம் அனைத்து வழிகளிலும் முயற்சித்தோம், ஆனால் எதுவும் உரிய பலனைத் தரவில்லை.
பிரித்தானியாவுக்குள் யார் நுழைய வேண்டும் என்பதை இந்த நாடும் உங்கள் அரசாங்கமும் தீர்மானிக்க வேண்டும், குற்றக் குழுக்கள் அல்ல எனவும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.