சென்னை: தமிழ்நாட்டில், தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பணிகளில் வடமாநிலத்தவர்களே பணியாற்றி வரும் நிலையில், வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தி, வட மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால், தொழில்தறை முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழநாடு அரசு வடமாநிலத் தொழிலாளர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறத. […]